நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சுலோச்சனார் பாலத்திற்கு 176 வயதாகிறது. எனவே இந்த பாலத்தின் பாரத்தை குறைக்கும் வகையில் 18 கோடியில் பாலம் அமைக்க அரசு முடிவெடுத்தது. இதற்கான பணிகள் ஆறு மாதத்திற்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விறு விறு பணிகள்.
புதிய பாலம் 237 மீட்டர் நீளம், 14.8 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. இதில் 10.5 மீட்டர் அகலத்திற்கு வாகனங்கள் செல்லவும், எஞ்சியுள்ள அளவில் இருபகுதியும் பாதசாரிகள் செல்ல நடைபாதையும் அமைக்கப்படுகிறது.
புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் அதிவிரைவாக நடந்து வருகின்றன. தற்போது வரை பாதிக்கும் மேல் பாலம் அமைக்கப்பட்டுவிட்டது.
நம் நெல்லை மாவட்டத்தில் தற்போது பெருமழைக் காலம். ஆண்டு தோறும் இந்த நேரத்தில் நம் தாமிரபரணி பரந்து விரிந்து பாய்ந்தோடுவாள். ஆனால் இந்த முறை அளவான மழை பெய்துள்ளதால் தாமிரபரணி அமைதியாக தவழ்கிறாள். இது பாலப் பணிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது.
இதனால் பாலப்பணிகள் விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. "பிள்ளையை போட்டு பலாப் பழம் எடுத்த ஓடை" பாலத்திற்கு அருகில் தொடங்கி முத்துராமலிங்கர் சிலை அருகே இந்த பாலம் முடிவடைகிறது.
Comments
Post a Comment