ஆண்டு தோறும் பொருட்காட்சி நடைபெறும் நம் நெல்லை மாநகராட்சி திடல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வர்த்தக மையமாக மேம்படுத்தப்பட உள்ளது. இதனால் வருங்காலங்களில் பிரம்மாண்ட தொழில் கண்காட்சிகளை நம் நெல்லையில் நடத்த முடியும்.
புதிதாக அமைய உள்ள இந்த மையம் கோவை கொடிசியா வர்த்தக மையத்தை போன்று மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளது.
பெருங்குறை நீங்கியது:
மதுரைக்கு தெற்கே உள்ள நான்கு மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் பெரிய மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற கண்காட்சிகள் இதுவரை சிறிய மண்பங்களில் தான் நடைபெற்று வருகின்றன. இதனால் நம் நெல்லை பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது. இந்த குறையை போக்கும் வகையில் புதிய மையம் அமைகிறது.
வசதிகள்:
1. இந்த மையம் 7.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது.
2. தரைத்தளத்தில் சுமார் 350 கார்கள் நிறுத்தும் வகையில் விசாலமான கார்பார்க்கிங் அமைக்கப்படுகிறது.
3. மேலுள்ள தளங்களில் இரு அரங்கங்கள் மற்றும் உணவு அருந்தும் கூடம் முதலியவை அமைக்கப்படுகின்றன.
பொங்கலுக்கு பிறகு பணிகள்.
வரும் பொங்கலுக்கு பிறகு இதற்கான கட்டுமானப் பணிகள் துவங்கும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதனால் தான் இங்கே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
விரைவில் அமையவுள்ள இந்த மையத்தால் நம் நெல்லை தொழில்துறையில் முக்கிய நகரமாக மாற வாய்ப்பு ஏற்படும்.

Comments
Post a Comment