Skip to main content

ஏன் திருநெல்வேலியை இப்படி கேவலப்படுத்துகிறீர்கள்.?

திருநெல்வேலியை ரவுடிளின் களமாக சித்தரித்து வெளியாகியிருந்த 'சாமி' என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவர உள்ளது. இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. மிகவும் மோசமாக நம் திருநெல்வேலி இப்படத்திலும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அதாவது அரிவாளின் நிழலில் திருநெல்வேலி -3 கி.மீ என்ற மைல் கல்லின் மீது போலீஸாக விக்ரம் அமர்ந்திருக்கிறார்.

காட்சியில் உள்ள பிழைகள்:

விக்ரம் அமர்ந்திருக்கும் சுற்றுப்புறமெங்கும் வெட்டவெளியாக உள்ளது. திருநெல்வேலி சுமார் 15 கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு மாநகரமாகும்.
ஆனால் இதில் மூன்று கி.மீ தொலைவில் திருநெல்வேலி இருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது. டைரக்டர் நம் நெல்லையை குக்கிராமம் என்று நினைத்துவிட்டார் போல.!

அடுத்து காட்சியில் டெல்லி-திருநெல்வேலி மெயின் ரோட்டில் விக்ரம் அமர்ந்திருக்கிறார். அந்த ரோடு வடக்கு-தெற்காக நம்ம ஊரில் அமைந்துள்ளது. ஆனால் காட்சியில் கிழக்கு-மேற்காக சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சொந்த ஊருக்கு திரும்பும் திருநெல்வேலி காரர்களை அரிவாளோடு வரவேற்பதன் மூலம் நெல்லை மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துகிறது திரைக்கதை.

ஏன் நாங்கள் எதிர்க்கிறோம்.?

திருநெல்வேலியை திரைப்படத்தில் காட்ட கூடாது என்பது எங்கள் எண்ணமில்லை. காட்ட வேண்டிய அளவிற்கு இயற்கை அழகு எங்களிடம் இல்லையா.? எம்மக்களின் குணம் இல்லையா.? அதையெல்லாம் விடுத்து நெல்லையை வன்முறை களமாகவே சித்தரிப்பதை ஏற்க முடியாது.

காலங்காலமாக நெல்லை,தூத்துக்குடியை வன்முறை களமாகவே சினிமா காரர்கள் சித்தரிக்கிறார்கள். இதனால் தென்மாவட்டங்களை பற்றிய இமேஜ் பலமாக அடிவாங்கி இப்பகுதியின் தொழில் முதலீடு பெருமளவு குறைகிறது.

ஆண்டு தோறும் பள்ளி தேர்வுகளில் முதல் பத்து இடங்களை பிடித்து விடும் நெல்லை,தூடி,குமரி மாவட்டங்களை இப்படி கொலை களமாக சித்தரிப்பதை சினிமா காரர்கள் இனியாவது நிறுத்த வேண்டும். எங்கள் மண்ணை உண்மையாக அடையாளப்படுத்தும் திரைப்படங்களை அவர்கள் எடுக்க வேண்டும்.

Comments


  1. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள படத்துக்காக இந்த நிலையில் மீண்டும் சில நாடகங்களின் காட்சி அமைப்பு தமிழ் நாடக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...