தமிழகத்தின் ஒரே வற்றாத ஜீவநதியாக திகழும் தாமிரபரணி 4,000 அடி உயரமான அகத்திய மலையில் பிறக்கிறது. வித விதமான மூலிகை மரங்களை தழுவி பாய்வதால் இதற்கு மருத்துவ நதி என்ற பெயரும் உண்டு. சுமார் 120 கி.மீ பாயும் இந்த நதி நெல்லை,தூத்துக்குடி மாவட்ட விவசாயத்தை செழிக்க வைக்கிறது. தமிழகத்தில் ஆபத்தில் சிக்கியுள்ள நதிகளில் முதன்மையானதாகவும் தாமிரபரணியே திகழ்கிறது. இரண்டு மாவட்ட விவசாயத்திற்கும் ஐந்து மாவட்ட குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் இந்த நதிக்கரையோரம் ஏராளமான தொழிற்சாலைகள் முளைத்துள்ளதே அதற்கு காரணம். தொழிற்சாலைகளின் இயக்கத்திற்கு நாளொன்றுக்கு லட்சக்கணக்கான லிட்டர் நீர் ஆற்றிலிருந்து உறிஞ்சப்படுகிறது. எனினும் தொழிற்சாலைகளுக்கு அடுத்து தாமிரபரணியை நாம் தான் அதிகமாக மாசுபடுத்துகிறோம்.
பாபநாசத்தில் மலையிலிருந்து இறங்கி சமவெளியில் தாமிரபரணி ஓடத் துவங்குகிறது. அதில் இருந்து வி.கே.புரம், அம்பை,கல்லிடைக்குறிச்சி,சேரன்மகாதேவி முதலிய ஊர்களில் நதி மாசுபாட்டை சந்திக்கிறது. ஆலைக் கழிவுகளும் ஆற்றில் சேர்கின்றன. அதை தொடர்ந்து திருநெல்வேலி மாநகருக்குள் தாமிரபரணி நுழையும் போது மிகக் கொடுரமாக ஆறு மாசுபடுகிறது. மேலப்பாளையம், கருப்பந்துறை,சிந்துப்பூந்துறை,வண்ணார்பேட்டை முதலிய இடங்களில் இருந்து ஓடி வரும் சாக்கடை நீர் தாமிரபரணியில் கலந்து அதை சின்னாபின்னமாக்குகிறது. இதனால் ஆற்று நீர் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. இந்த தாக்குதலை தாங்கிக்கொண்டு வல்லநாடு,ஸ்ரீவைகுண்டம், முதலிய ஊர்களை கடந்து ஆத்தூர்,ஏரல் தாண்டி கடலில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கடலில் சென்று கலக்கிறது.
தாமிரபரணி நதி அதிகம் மாசுபடுவது திருநெல்வேலி மாநகரில் தான். சுமார் 70% மாசுபாடு நெல்லை மக்களால் தான் ஏற்படுகிறது. நமது தவறை நாம் சரிசெய்யாவிட்டால், இன்று நாம் பார்க்கும் தாமிரபரனியை நம் எதிர்கால சந்ததியினர் கூவமாகவே பார்ப்பார்கள். அந்த நிலை ஏற்படாமல் இருக்க நம்மாலான முயற்சிகளை செய்து நதியை காக்க வேண்டும். தாகம் தீர்க்கும் தாயை நாம் இழந்துவிடக் கூடாது.

Comments
Post a Comment