தமிழ்நாட்டு நிலப்பரப்பில் தூத்துக்குடியின் அமைவிடம் சிறப்பு வாய்ந்தது. குறிஞ்சி தவிர்த்து மீதம் நான்கு வகையான நிலங்களும் அம்மாவட்டத்தில் உண்டு. தெற்கே தாமிரபரணி பாய்ந்து செழிக்க வைத்தாலும் பிற பகுதிகளில் வறட்சியே நிலவுகிறது. இது தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு சாதகமாகி விடுகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் தூத்துக்குடியில் கோரல் மில் என்ற நூற்பாலை செயல்பட்டது. ஆனால்
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தூத்துக்குடி ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளால் சீரழியத் துவங்கியது. ஒரு புறம் வேலைவாய்ப்பு, வருமானம் என மக்களின் வாழ்கை தரம் உயர்ந்தாலும், மறுபுறம் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மாவட்டம் ஸ்தம்பித்து வருகிறது. தூத்துக்குடி மாநகரில் மட்டுமே இந்திய அரசின் அனல்மின் நிலையம் (இரண்டு) ஸ்பிக் உரத் தொழிற்சாலை, இன்பிற ஆலைகள் என பெரிய தொழிற்சாலைகளின் கேந்திரமாக தூத்துக்குடி மாற்றப்பட்டுள்ளது. இதில் ஸ்டெர்லைட் ஆலை தாமிர உருக்கு ஆலையாக செயல்பட்டு தூத்துக்குடி ஊருக்கே உலை வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனின் கழிவுகளால் சுற்றுவட்டார மக்களுக்கு ஏராளமான நோய்கள் ஏற்படுவதாக கிராமத்தினர் கூக்குரலிடுகிறார்கள்.
தூத்துக்குடி என்ன வேட்டைகளமா.?
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லை என்பதற்காக உயிர் குடிக்கும் நச்சு ஆலைகளை திறப்பது பயங்கரமான அநீதி. இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பாதிப்பு வராத தொழில் திட்டங்களை துவங்குவதையே நாங்கள் விரும்புகிறோம். ஏற்கனவே பல சமூகம் சார்ந்த பிரச்னைகளால் நிலைகுலைந்து போயிருக்கும் நெல்லை தூத்துக்குடியை வெளிநாட்டு வியாபாரிகளுக்கு விற்றுவிடாதீர்கள். எங்கள் மண்ணையும் மக்களையும் காக்கும் தொழில் நிறுவனங்களை மட்டுமே துவங்கி எங்களை நிம்மதியோடு வாழ விடுங்கள்.
Comments
Post a Comment