பாண்டிய நாட்டிற்கு பெருமைகள் பல இருக்கின்றன. ஆனால், அவற்றுள் முக்கியமானது இரண்டு. ஒன்று- மதுரை. மற்றொன்று நெல்லை என்றழைக்கப்படும் திருநெல்வேலி.
பாண்டியர்கள் இந்த இரண்டு நகரங்களையே தங்களின் தலைநகரமாக வைத்திருந்தார்கள். இந்த இரு நகரங்களுக்கும் ஏராளமான ஒற்றுமைகளும் உண்டு.
இரு நகரங்களும் ஆற்றங்கரையோரம் அமைந்த நகரங்கள்.
இரு நகரங்களும் மாபெரும் கோவில்களை கொண்ட நகரங்கள்.
இரண்டும் தமிழ் வளர்ச்சியில் முன்னின்ற பெருமை கொண்டவை. நெல்லை பொதிகை மலையில் பிறந்த தமிழுக்கு மதுரையில் சங்கம் வைத்து வளர்த்தனர் பாண்டி நாட்டு தமிழ்மக்கள்.
தாமிரபரணி கழிமுகத்தில் பிறந்த முத்துகள் மதுரை ராஜ கிரீடங்களை அலங்கரித்த நாட்களும் உண்டு. பண்டைய தமிழகத்தில் இரு பெரும் நகரங்களாக இவை தான் திகழ்ந்திருக்கின்றன.
சைவ வைணவ சமத்துவ களங்களாகவும் இவ்வூர்கள் திகழ்கின்றன. மதுரையில் ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை பெருவிழா இதற்கு எடுத்துக்காட்டு. அதே போல் வேறெங்குமே காண முடியாத அதிசயமாக திருமாலும்,சிவனும் அருகருகே அமைந்த கருவறை நெல்லையப்பர் கோவிலில் அமைந்துள்ளது.
இன்றும் வீரத்திற்கும் தீரத்திற்கும் இந்த இரு நகரங்களே அடையாளமாக திகழ்கின்றன.
தமிழ்நாட்டில் பல நகரங்கள் சுற்றுலா தலத்திற்கு புகழ் பெற்றதாக விளங்கினாலும் இவ்வூர்கள் இரண்டும் உணவு பொருளுக்கு புகழ் பெற்று விளங்குகின்றன.
திருநெல்வேலி- அல்வா, காரம்.
மதுரை- ஜிகர்தண்டா,இட்லி
இரண்டும் பல பெருமைகளை கொண்டிருந்தாலும், மக்கள் தொகையிலும் நகர வளர்ச்சியிலும் திருநெல்வேலியை காட்டிலும் மதுரையே முன்நிற்கிறது. ஆனால், வைகை வற்றியதால் விவசாயத்தில் நெல்லை முன்னிற்கிறது. கல்வியிலும் மதுரைக்கு தெற்கு மாவட்டங்கள் மாநிலத்தில் முதல் பத்து இடங்களை ஆண்டுதோறும் பிடித்து விடுகின்றன. மாறிவரும் நவீன உலகிலும் தங்களின் கலாச்சாரம், மொழி பாஷை, பண்பாடு முதலியவற்றில் இந்த இரு நகரங்களும் தமிழ்நாட்டிற்கே முன்னோடியாய் திகழ்கின்றன. காலத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக்கொண்டு பீடு நடை போடுகின்றன.

Comments
Post a Comment