தமிழ்நாட்டு நிலப்பரப்பை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றோடு முடிவடைய உள்ளது. சித்திரை மாதத்தின் உட்சபட்ச வெப்பம் இந்த காலக்கட்டத்தில் நிகழும். ஆனால், நம் திருநெல்வேலியை பொறுத்த அளவில் இந்த அக்னி நட்சத்திரம் பொதுவாக எடுபடுவதில்லை. அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதல் நெல்லையில் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. சில நாட்களில் மழையும் பெய்தது. சென்ற ஆண்டும் இதே போன்ற நிலையே நீடித்தது. இதை வைத்து நெல்லை மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது பிற ஊர் மக்கள் அய்யய்யோ என்ற போதும் நம் நெல்லை அரண்டது கிடையாது. அதேப் போல அது முடிவடையும் போதும் அப்பாடா என்று சொல்லும் வழக்கமும் நம் நெல்லையின் அகராதியில் கிடையாது. அது தான் நெல்லை.!
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமை நம் திருநெல்வேலிக்கு உண்டு. நெல்லையின் பாளையங்கோட்டை கல்லூரி,பள்ளிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு நகரம். தென்தமிழகம் இன்று அடைந்திருக்கும் கல்வி வளர்ச்சியில் பாளையங்கோட்டைக்கு மிக முக்கிய பங்கு உண்டு. நெல்லையின் பட்டதாரிகள் இன்று உலகம் முழுதும் செல்வாக்கு மிக்க இடத்தில் அமர்ந்துள்ளனர். சில ஆண்டுகள் முன்பு வரை அறவே தொழில் வளர்ச்சி இல்லாத நிலை நெல்லையில் தற்போது மாறிவருகிறது. அருகே தூத்துக்குடி மிதமான தொழில் வளர்ச்சியை கண்டு வருகிறது. நெல்லையிலும் தொழில் துறை அரும்பத் தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்ப உட்கட்டமைப்பு,மனிதவளம் உள்ளிட்டவையும் நம்மிடம் சிறந்த வகையில் உள்ளது. தேவை ஐஐடி, என்ஐடி: கல்வி ரீதியில் பல்கலைக்கழகம், கல்லூரிகள் பல திருநெல்வேலியில் அமைந்திருந்தாலும் இந்திய அரசின் கல்வி நிறுவனம் நெல்லையில் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் உள்ளூரில் தரம் வாய்ந்த கல்வி கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அதுவும் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு நகரில் ஒரு இந்திய அரசு கல்வி நிறுவனமும் இல்லாதது
Comments
Post a Comment