இந்திய சுதந்திரத்திற்கு ஏராளமான தியாகிகளை தந்த மண் தூத்துக்குடி (அன்று நெல்லை மாவட்டம்).
இன்று விஷக்காற்றில் இருந்து விடுதலை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறது. அமைதி வழியில் திரண்ட அப்பாவி மக்களை காவல் துறை துப்பாக்கியால் எதிர் கொண்டதில் 11 பேர் செத்து மடிந்திருக்கிறார்கள். மே மாதத்தில் நடந்த வன்முறை சம்பவம் சுதந்திர போராட்டத்தை நினைவு படுத்துகிறது. அரசை தட்டிக்கேட்கும் மக்களை வன்முறையால் ஒடுக்குவது ஏற்கனவே திருநெல்வேலியில் நடந்துள்ளது.
அன்று திருநெல்வேலி:
ஜீலை 23 1999 ல் இதே போன்ற பிரம்மாண்ட பேரணியை நெல்லை மாநகரம் சந்தித்தது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி பெருந்திரளாக திரண்டு போராட்டம் நடத்தினர். நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட முயன்ற போது, பெரும் தடியடி நடத்தி காவல்துறை விரட்டியடித்தது. துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் கூறுவார்கள். அந்த கோர சம்பவத்தில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் குதித்தும், நெரிசலில் சிக்கியும் செத்துப் போயினர்.

இன்று தூத்துக்குடி:
ஆனால் அதை விட பயங்கரமாய் இன்று தூத்துக்குடியில் 11 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளனர். விஷக்காற்றை பரவ வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த இந்த போராட்டம் தூத்துக்குடி வரலாற்றில் மிகப் பெரிய கறையாக விழுந்துள்ளது. நாட்டுக்கே விடுதலை வாங்கித் தந்த வம்சம் இன்று வாழ்வாதாரத்தை காக்க போராடுவது பெரும் அவலம்.
Comments
Post a Comment