திருநெல்வேலி ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டிருப்பது நெல்லைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
சந்தீப் நந்தூரி நெல்லை ஆட்சியராக நியமிக்கப்பட்டது முதல் பல்வேறு பணிகளை மக்கள் ஆதரவோடு நிறைவேற்றினார். குறிப்பாக தாமிரபரணி ஆற்றை மாணவர்களின் உதவியோடு தூய்மை படுத்தியது, இந்தியாவிலேயே முதல்முறையாக அன்பு சுவர் திட்டத்தை துவங்கியது, தமிழ்நாட்டில் முதல்முறையாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேட்ரி கார் சேவையை துவங்கியது என பல திட்டங்களை நிறைவேற்றி பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றார்.
மேலும் நெல்லையப்பர் கோவிலின் மீது தனி அக்கறை எடுத்துக்கொண்டு 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுத்தார். நெல்லை மாவட்ட கோவில்களை உலகறியச் செய்யும் டாக்கிங் டெம்பிள் முதலான டிஜிட்டல் யுகம் சார்ந்த சேவைகளில் கவனம் செலுத்தினார்.

எனினும், சில மாதங்களுக்கு முன்னர் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டு தற்கொலை சம்பவம் நடந்தபோது அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதேப் போல நெல்லையில் ராம ராஜிய ரதம் நுழைந்த போது 144 தடை விதித்த போதும் சர்ச்சையில் சிக்கினார். இருந்தபோதும் மக்கள் சேவையில் மனிதாபிமானத்தை கடைபிடித்ததால் மக்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று வந்தார். வரும் ஆண்டு 144 வருடங்களுக்கு பிறகு நடைபெற இருக்கும் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு விரிவான ஏற்பாடுகளையும் செய்துவந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத சூழ்நிலையால் அவர் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் மக்கள் நல சேவைகளில் தனித்து செயல்பட்ட அவரை அவ்வளவு சீக்கிரமாக நம் திருநெல்வேலி மறக்காது.
Comments
Post a Comment