தென்மேற்கு பருவமழை நேற்று கேரளாவில் தொடங்கியது. இதனால் நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பின்னர் மழை குறைந்ததால் வெள்ளம் தணிந்து மிதமான தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவி, பழைய குற்றாலம்,ஐந்தருவி,புலியருவி முதலியவற்றில் குளிப்பதற்கு ஏற்றவாறு தண்ணீர் விழுகிறது.தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான தென்றல் தவழ்வதாலும் விட்டு விட்டு தூறல் தூற்றுவதால் இந்தாண்டுக்கான சாரல் காலம் (சீசன்) தொடங்கிவிட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். வாரத்தின் இரண்டாம் நாளான இன்று குற்றாலத்தில் கூட்டம் அவ்வளாக இல்லை. எனினும் வார இறுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.!
பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

Comments
Post a Comment