Skip to main content

தூத்துக்குடியை இனியும் சீண்டாதீர்கள்.!

தூத்துக்குடியின் மிகப் பெரிய ஆலைகளுள் ஒன்றான ஸ்டெர்லைட்டை எதிர்த்து மக்கள் போராடியதில் 13 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தங்கள் நிலத்தையும், காற்றையும் விஷத்தில் இருந்து விடுதலை பெற வைக்க தூத்துக்குடி மக்கள் திரண்டெழுந்தனர். இவ்வாறு தூத்துக்குடி மக்கள் திரண்டெழுவது இது முதல் முறையல்ல.

நாட்டுக்கே விடுதலை தந்த பூமி:

இந்திய நிலப்பரப்பு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த வெள்ளைக்காரன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது அன்றைய நெல்லையும் தூத்துக்குடியும். வ.உ.சி ஆங்கிலேய கப்பல்படைக்கு சவால் விட்டு சுதேசி கப்பலை விட்ட போது மிரண்டு போனான் பிரிட்டிஷ் காரன். பாரதி தன் கவிதைகளால் சாட்டையை சுழற்ற, சுப்ரமணிய சிவா முதலியவர்கள் தணியாத வேட்கையோடு சுதந்திர போரில் ஈடுபட்டிருந்நனர். அதற்கு முன்பே கட்டபொம்மன் தூக்கு கயிறுக்கு முத்தமிட்டு மாண்டது இந்த மண்ணில் தான் நிகழ்ந்திருந்தது. இப்படி தங்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து போரிட்டு ஒட்டு மொத்தமாக இந்திய நாட்டிற்கே விடுதலை தந்த மண் தூத்துக்குடி. ஆனால், தற்போது பல்வேறு உள்நாட்டு அரசியல் சூழ்ச்சிகளால் ஆங்கிலேய ஆலையிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது இந்த மண். பல்வேறு விதமான நோய்களுக்கு தோற்றுவாயாக ஸ்டெர்லைட் இருப்பதாக 20 ஆண்டுகளாக மக்கள் கூக்குரலிட்டு வந்தார்கள். அதை யாருமே கேட்கவில்லை. கேட்டாலும் ஆலையை நிரந்திரமாக மூட முன்வரவில்லை. இனியும் பொறுத்துக் கொண்டிருக் முடியாது என காலவரையற்ற அறப்போராட்டத்தை கையிலெடுத்து சீறியது முத்துமாநகரம். போராட்டம் 99 நாட்களை கடந்து 100 வது நாளில் விஸ்வரூபம் எடுத்தது. இத்தனை நாட்களாக அமைதி காத்த மக்கள் பீறிட்டு எழுந்தார்கள். அரசாங்கமோ அவர்களின் உணர்வுகளை அணுகத் தெரியாமல், அவர்களை வன்முறை கண்ணோட்டத்தோடு கண்டு தடியடி செய்து கலைக்க முற்பட்டனர். அரசாங்கத்தின் இந்த அநீதியை காண சகிக்காத முத்துநகர மக்கள் வெகுண்டெழுந்து அசைவற்று இருக்கும் அதிகார பீடங்களை சூறையாடும் நிலைக்கு துரதிருஷ்டவசாக தள்ளப்பட்டனர். வீறுகொண்டெழும்பிய மக்கள் கூட்டத்திற்கு துப்பாக்கி குண்டுகளே நீதியாக கிடைத்தது. 13 பேர் மாண்டுள்ளார்கள். நூற்றுக்கணக்கானோர் அவதியடைந்துள்ளனர். அரசாங்கம் நிவாரணத்தை வழங்கியிருக்கிறது. தூப்பாக்கிச் சூட்டிற்கு நியாய வாதங்களை அரசு எடுத்துவைக்கிறது.
எனினும் பலியான அப்பாவி மக்களின் குடும்பங்களை இவைகள் எந்த விதித்திலும் ஆற்றுபடுத்தாது. மக்கள் வேண்டியது ஆலை மூடல். ஆனால் அரசாங்கமோ, மின்சாரத்தை துண்டித்து விட்டு ஆலையை மூடிவிடுவோம் என்கிறார்கள். பிரச்னை நீதி மன்றத்தில் இருப்பதால் ஆலை திறக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே ஆலையை மூட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை அரசு உடனடியாக செய்யாவிட்டால், தூத்துக்குடி அதை எதிர்த்து மீண்டும் சீறும். உயிர்த் தியாகம் செய்யத் துணிந்த தூத்துக்குடி அடுத்த கட்டத்திற்கு செல்லவும் தயங்காது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும். ஆங்கிலேயனை விரட்டியடித்த மக்களுக்கு இந்த ஆலையிடம் இருந்து விடுதலை வாங்கித் தர வேண்டும். இல்லையெனில் அம்மக்களின் சீற்றம் இன்னும் அதிகமாகுமே தவிர அஸ்தமிக்காது.

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...