Skip to main content

திருநெல்வேலியின் பென்னிகுவிக்.!

முல்லைப்பெரியாறு அணையை கட்டி மதுரை சுற்றுவட்டார கிராமங்களை பாதுகாத்தவர் திரு.பென்னிகுவிக். வெளிநாட்டில் இருந்து வந்து தமிழகத்தின் வாழ்வு காத்த அவரை தென்மாவட்டங்கள் என்றுமே மறவாது.
அப்படி செங்கல்பட்டில் இருந்து வந்து நம் நெல்லை மக்களின் பெருந்தேவையை 1860ம் ஆண்டு தீர்த்து வைத்தவர் திரு. சுலோச்சனார்.

அன்று திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் பெருந்தொலைவில் இருந்தன. அன்று சீமையாக திகழ்ந்த நெல்லைக்கு பாளை பகுதி மக்கள் வரவேண்டுமெனில் ஆற்றை கடந்தே வர வேண்டும். வசதி உள்ளவர்கள் படகை பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலைமை வெகு நாட்களாக நிலவி வந்துள்ளது. நாளடைவில் இரு நகரங்களும் வளர ஆரம்பித்ததும் நதியை கடக்க மக்கள் பெரும் சிரமப்பட்டுள்ளனர். இதை ஆங்கிலேயர்கள் கண்டும் காணாமல் இருந்து விட்டார்கள். பாலம் கட்டவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்த போதும் ஆங்கிலேய கலெக்டர்கள் அதை ஏற்கவேயில்லை. பெரும் செலவு செய்ய ஆங்கிலேய அரசு அப்போது பெரிதும் யோசித்தது. இந்த நிலையில் நெல்லை ஜில்லா கலெக்டர் தாம்சனின் சிரஸ்தராக பணியாற்றிய சுலோச்சனர் இந்த பிரச்னையை கையிலெடுத்து தீர்வு காண முயன்றார். அதற்காக தனது மனைவியின் உதவியோடு பெரும் தொகையை திரட்டி தனது சொந்த செலவில் (50லட்சம்- இப்போதைய மதிப்பில் 10 கோடி இருக்குமாம்.!) அதை கட்டி முடித்தார். அதுவும் அந்த பாலம் லண்டன் தேம்ஸ் நதி பாலத்தை போன்றே பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என விரும்பி அவ்வாறே கட்டி முடித்தார்.

அவரது அன்றைய தன்னலமற்ற சேவை, ஆற்று வெள்ளத்திலிருந்து பல மக்களை காத்திருக்கிறது. நெல்லை மாநகரமும் கிழக்கு-மேற்காக விரிவடைய ஆரம்பித்தது. 174 ஆண்டுகளாக பல்வேறு சீரமைப்புகள் செய்யப்பட்டு இன்று அகலமாக நீண்டு நிற்கும் இந்த பாலம் நம் நெல்லையின் தவிர்க்க முடியாத அடையாளமாகியுள்ளது. பாய்ந்தோடிய தாமிரபரணியால் பிரிந்து கிடந்த நெல்லையை பாளையோடு இணைத்து வைத்த திரு.சுலோச்சனார் நம் பாரம்பரியமிக்க திருநெல்வேலியின் பென்னிகுவிக்காக என்றென்றும் திகழ்வார்.

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...