குற்றாலத்தில் சீசன் துவங்கிவிட்டால் தென் தமிழக மக்களுக்கு ஆனந்தம் பூரிக்கும். அருவியில் குளித்து மகிழலாம் என்பது ஒரு புறம் இருந்தாலும் குற்றால சீசன் தென் மாவட்ட வானிலையை முற்றிலுமாக மாற்றிப்போட்டுவிடும் என்பதே அதற்கு காரணம்.
தென்காசி,செங்கோட்டை முதலிய நகரங்கள் குற்றால சாரலை நேரடியாக அனுபவிக்கும். நெல்லையின் மேற்கு பகுதிகளான பாபநாசம், சேர்வலார் முதலிய பகுதிகளிலும் மழை அடிக்கும்.
திருநெல்வேலியில் எப்படி இருக்கும்.?
குற்றாலம் சாரலில் நனைந்து கொண்டிருக்கும் போது திருநெல்வேலி மாநகரம் தென்றலால் தாலாட்டப்பட்டு கொண்டிருக்கும். மலையாள மழை மேகங்கள் தாங்கள் கொண்டுவந்த நீரை குற்றாலத்தில் முழுவதும் இறக்கி வைத்துவிட்டு நெல்லையில் குளிர் காய விரைந்து வரும். ஆனி,ஆடி முதலிய மாதங்களில் திருநெல்வேலியில் புதுத் தென்றல் விசும். அவ்வப்போது சாரலும் அடிக்கும். மிதமான வானிலையே நிலவும். புதுவித அனுபவத்தை அது தரும்.

Comments
Post a Comment