Skip to main content

காலா: தூரத்தில் ஒலிக்கும் நெல்லைக் குரல்.!

ரஜினி நடித்து விரைவில் வெளிவரவுள்ள காலா திரைப்படம் ஊரை விட்டு பம்பாய்க்கு பிழைக்கச்சென்ற திருநெல்வேலி குடும்பங்களின் கதையை திரையில் பேசவுள்ளது.

அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாய நிலங்களற்ற மக்கள் பிழைப்பு தேடி பம்பாய் மாநகரில் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு பின்னர் அவர்களின் சொந்த பந்தங்களும் பம்பாய்க்கு சென்று உருவாக்கியதே இன்றைய தாராவி. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் இன்றும் தமிழர்களே பெரும்பான்மையாக வசித்துவருகின்றனர். தாராவி இன்றைய மும்பையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் அந்த இடத்தின் மதிப்பு பல ஆயிரம் மடங்காக அதிகரித்துள்ளது.

காலங்காலமாக தமிழர்களே அந்த இடத்தை புழங்கி வந்திருந்தாலும், அவர்களை அகற்ற பம்பாய் தாதாக்கள் எடுத்த முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல. அப்படி எடுத்த முயற்சிகளுக்கு கடும் சவாலாக நம் திருநெல்வேலி தமிழ் மக்கள் இருந்துள்ளனர். பல நேரங்களில் பம்பாய் தாதாக்களை நம் நெல்லையை சேர்ந்த மக்கள் அவர்களின் வழியிலேயே விரட்டியடித்த கதைகளை இப்போதும் திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் வசிக்கும் பம்பாய் குடும்பத்தினரிடம் கேட்கலாம். காலா என்ற பெயரோடு இந்த படத்தில் நடித்துள்ள ரஜினி, ஒரு பம்பாய் பெரும்புள்ளிக்கு கடும் சவாலாய் விளங்கும் திருநெல்வேலிகாரராய் வருகிறார். அப்போதே தங்களின் வாழ்வாதாரத்தை தேடி பல ஆயிரம் கி.மீ கடந்து சென்ற நம் திருநெல்வேலி சொந்தங்களின் வீர வரலாற்றை காலா பேச இருக்கிறது. எதிர்பார்ப்போம்.!

Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

பிளக்கிறது நெல்லை.பிறக்கிறது தென்காசி.!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான நம் திருநெல்வேலியை இரண்டாக பிரிக்கும் வேலையை தமிழக அரசு தொடங்கிவிட்டது. தென்காசி நகரை தலைமையாக கொண்டு புதிய மாவட்டமொன்று மலரவுள்ளது. சிதறும் நெல்லை ஆங்கிலேயர் ஆட்சியில் பரந்து வரிந்த மாவட்டமாக இருந்த திருநெல்வேலி அடுத்து வந்த ஆட்சியாளர்களால் ராமநாதபுரம்,விருதுநகர்,தூத்துக்குடி என துண்டாடப்பட்டது. தற்போது அதுமேலும் பிளவுபட காத்திருக்கிறது. மக்கள் விருப்பம் என்ன? நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க அரசு முயன்று வருவதை நம் மக்கள் பலரும் விரும்பவில்லை. எனினும் தென்காசி சுற்றுவட்டார பகுதி மக்களின் கருத்து வேறு வகையில் உள்ளது. தங்கள் ஊர் மாவட்ட தலைநகரமாக மாறுவதை அவர்கள் விரும்புகிறார்கள். நெல்லைக்கு பேரிழப்பு: தென்காசி தனிமாவட்டமாக பிரிந்தால் நெல்லைக்கு அது பெரும் இழப்பாகும். • குற்றாலம் இனி நெல்லை மாவட்டத்தில் இருக்காது. • ‎செங்கோட்டை பார்டரை இழப்போம். • ‎செழிப்புமிக்க பல விவசாய ஊர்கள் அங்கே சென்றுவிடும். • ‎அழகிய அணைக்கட்டுகள் பல அம்மாவட்டத்தோடு இணையும். • ‎மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் பகுதி நம்மிடம் இருக்காது. • ‎பாபநாசம்,மாஞ்சோலை...