தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடி வந்த ஸ்டெர்லைட் சற்றுமுன் இழுத்து மூடப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வன மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அரசியலமைப்பு நெறிமுறைகளை பின்பற்றும் பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100 நாட்கள் தூங்காமல் தூத்துக்குடி போராடியதற்கான பலனை முத்துநகரம் இப்போது பெற்றுள்ளது. 13 அப்பாவி உயிர்களை தியாகம் செய்து இந்த வெற்றியை தூத்துக்குடி பெற்றிருப்பது அம்மண்ணுக்கு கிடைத்துள்ள விடுதலையாக கருத முடியும். வெள்ளைக்காரனுக்கு எதிராக சீறி அவனை துரத்தியடித்த தூத்துக்குடி, தற்போது தனக்கு எமனாக வந்த வேதாந்தா நிறுவனத்தையும் அடித்து விரட்டியுள்ளது. தூத்துக்குடி மூலம் பல கோடி ரூபாய் வர்த்தக லாபம் ஈட்டிய ஸ்டெர்லைட், இன்றைக்கு அதன் அடாவடி செயல்பாடுகளால் அம்மக்களாலேயே அடித்து விரட்டப்பட்டுள்ளது.!
"அன்பா வந்தா ஒளிகொடுப்போம்
வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்.!"
இதை தூத்துக்குடி தமிழர்கள் செய்து காட்டிவிட்டார்கள்.! கெத்தாக.!
"அன்பா வந்தா ஒளிகொடுப்போம்
வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்.!"
இதை தூத்துக்குடி தமிழர்கள் செய்து காட்டிவிட்டார்கள்.! கெத்தாக.!
Comments
Post a Comment