Skip to main content

உலக நாகரிகத்தின் தொட்டில்: நெல்லை ஆதிச்சநல்லூர்


நாம் படிக்கின்ற காலத்தில் இந்தியாவின் மிகப்பழமையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றே நம் வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், உண்மையில் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பே நம் நெல்லை தாமிரபரணி கரையோரத்தில் மிகச் செழிப்பான நாகரிகம் இருந்துள்ளது.

4000 ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகம்.

நம் தாமிரபரணி கரையோரப்பகுதி இப்போது போலவே அந்த காலங்களிலும் மிகச் செழிப்பாக இருந்துள்ளது. பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை உயர்ந்த நாகரீகத்தை பின்பற்றி நம் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆதியில் தோன்றிய ஆதிச்சநல்லூர்:

நம் நெல்லையில் இருந்து பதினெட்டே கி.மீ தொலைவில் தான் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி இங்கே நடந்து கொண்டிருந்த சமயத்தில் அலெக்ஸாண்டர் என்ற தொல்பொருள் ஆய்வாளர் அகழாய்வை மேற்கொண்டார். அதில் அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தது.  ஆம், உலகிலேயே மிகப் பெரிய இடுகாடு ஒன்று அங்கே இருப்பதைக் கண்டு அசந்துபோனார்.

சுமார் 110 ஏக்கரில் அது அமைந்திருக்கிறது. இடுகாடே இத்தனை பெரியதாக இருந்தால் அங்கே மிகப் பெரிய நகரம் ஒன்றும் இருந்திருக்கும் என அறிவித்தார் அந்த ஆய்வாளர்.

அது மட்டுமின்றி ஆதி தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த படைக் கருவிகள்,பயன்படுத்திய சாமான்கள்,தங்கம்,இரும்பு முதலிய உலோகங்கள் என பலவற்றை ஆய்வுக்கு எடுத்துச் சென்றார் அவர்.

முதுமக்கள் தாழி..!

இறந்தவர்களின் உடலை மண்கலங்களில் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் அந்த மக்களிடையே இருந்துள்ளது. இது எகிப்து மம்மி போன்ற நடைமுறை. இதுவும் அகழாய்வின் போது கண்டறியப்பட்டது. ஆனால் இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் போதுமான அளவில் பதிவு செய்யப்படவில்லை. இந்திய வரலாற்றில் பெரும் மாற்றத்தை இது கொண்டுவரும் என்பதால் இதை தொடுவதற்கே அச்சப்படுகிறார்கள்.

வருகிறது அருங்காட்சியகம்:

இந்நிலையில் வெகுநாட்களுக்குப் பிறகு, நம் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை காட்சி படுத்த வசதியாக உலகத் தரமிக்க அருங்காட்சியகம் ஒன்றை ஆதிச்சநல்லூரில் அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கீழடிக்கும் முந்திய நாகரீகம்.

தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கும் கீழடி அகழாய்வு சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தியது எனக் கூறப்படுகிறது. இது தமிழர்களின் தாய்மடி என வர்ணிக்கப்படுகிறது. ஆனால் ஆதிச்சநல்லூர் நாகரிகம் சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.

கீழடியில் நடைபெற்றதை போலவே மிகப்பெரிய அகழாய்வை நம் ஆதிச்சநல்லூரில் நடத்தினால் இந்திய துணைகண்டமே வியக்கும் வகையில் முடிவுகள் வெளிவரக்கூடும்.

தமிழ் மொழி தோன்றிய நம் நெல்லை மண்ணில் தான் மனித இனத்தின் முதல் நாகரீகமும் தோன்றியது என்ற தகவல் வரலாறாக பதியப்படும்...

தாமிரபரணி நதிக்கரை தரணியெங்கும் புகழ்பெறும்.!


Comments

  1. Tamil thondirathu kumamari kandam nellai illa

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உண்மையில் ஆதித்தன் நல்லூர் என்பதே ஆதிகாலத்து பெயர். பின்னர் காலப்போக்கில் பேச்சில் (கொச்சை தமிழில் ) ஆதிச்சநல்லூர் என மறுவியுள்ளது.
    ஆகையால் தூய தமிழில் ஆதித்தன் நல்லூர் என உண்மையான பெயரை மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...